Monday, October 14, 2013

பகத் சிங்




பகத் சிங் 1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந்தேதி பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.
சிறு வயதிலேயே 'ஜாலியன் வாலாபாக்' படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

விட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தோட்டத்தில் குழி வெட்டி முக்கால்வாசி புதைத்து அதை சுற்றி நீர் ஊற்றினார். அதை பார்த்த, அவரது தந்தை ஏன் பகத் இவ்வாறு செய்கிறாய் ? எனக்கேட்டார். அதற்கு பகத் அப்பா இந்த துப்பாக்கி மரமாகி தன் கிளைகளில் நிறைய துப்பாக்கிகளாய் காய்க்கும் அதை வைத்து வெள்ளையார்களை விரட்டுவேன், என்றார்.

இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். முதுபெரும் காங்கிரஸ் தலைவர் 'லாலா லஜபதிராய்' இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து,சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங், "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் (Indian parliment) குண்டு வீசுவதென்று தீர்மானித்தார்". 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் பகத் சிங் வீசிய, "ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்ரி பப்ளிகன் ஆர்மியின்" துண்டுப் பிரசுரம்.
“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
(Sarfrosh gethamanna abh Hamari dilme hai- Punjabi)

பகத் சிங் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. சில காலம் "நாத்திகனாய் இருந்த பகத் இறப்பதற்கு முன்" தனது சீக்கிய கடமையை நிறைவேற்ற அனுமதி கேட்டார். ஆனால், பிரிட்டிஷ் மறுத்துவிட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டணை நிறைவேற்ற அனுமதி கோரினார். அதுவும் மறுக்கப்பட்டது.

தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறார் பகத்சிங். தூக்கில் போடுவதற்க்காக பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள். உடனே ,பகத் சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறார்.
மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது. அவர் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது. துக்கத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்கள்.

இந்நாளில் அவரைப் போற்றுவோம்!
-வி. ராஜமருதவேல்

[copyrights reserved by rajamaruthavel- காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.]