அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம். தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும்.
தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்: கிருஸ்ணர்
என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர்.
சீக்கியர்களின் தீபாவளி சீக்கியர்கள் 1577-இல் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையொட்டி கொண்டாடிய மகிழ்ச்சிகரமான கொண்டாட்டம் இத் தீபாவளி என்கின்றனர்.
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி . கங்காஸ்நானம்: தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும்.ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம்.
பலவிதமான பலகாரங்கள் செய்கிறோம். அதில் முறுக்கு, அதிரசமே முதன்மையானது சீப்பு முறுக்கு, சோமாசா, பொக்குசா முறுக்கு , ஒல பக்கோடா ,நெய் உருண்டை, கெட்டி உருண்டை ,ரவா உருண்டை, சீடை, அல்வா , குலோப்ஜாமுன், பாதாம் அல்வா, தேங்காய்பாரை வரை நீள்கிறது. இது மட்டுமல்லாது நரகாசுரன் நினைவு நாள் என்பதால் அன்று வடையும் ,சுழியமும் வைத்து படைக்கப்படுகிறது. தீபாவளி அன்று உள்ளுர் கோவில்களில் வழிபடுவது சிறப்பு.
இன்று தீபாவளி என்பது ஏதோ கடமையை கழித்தல் போல் ஆகிவிட்டது.கடைகளில் பலகாரங்களில் வாங்கப்படுகிறது. கிராமங்களில் தான் தீபாவளி உயிர்ப்புடன் கொஞ்சம் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதம் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள், தீபாவளிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெடிச்சத்தம் காதை பிளக்கும், தீபாவளிக்கு முதல் நாளில் விண்ணை முட்டும் புகை மண்டலம் தான். இதில் நான் ராஜமருதவேல் பக்கத்து வீட்டுடன் போட்டி தான். முன்பெல்லாம் நான் இருநாட்களாக தீபாவளிக்கு தனியாக பட்டாசு வெடிப்பேன் தொடர்ச்சியாக. பக்கத்து வீட்டில் தீபாவளிக்கு ஆறு பேருக்கும் மேல் தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பார்கள் வெற்றி அவர்களுக்கு தான். சைக்கிள் பெல் மூடி, கொட்டாங்குச்சி,மாட்டு சாணம்,பிளாஸ்டிக் டப்பாக்கள், என வெடி வைத்து தகர்த்தோம். சுவர்களில் உள்ள ஒட்டைகளில் வெடி வைத்து பெரிதாக்குவது என அந்த கால கட்டங்கள் மகிழ்ச்சியானவை. யார் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் அதிகம் என்ற கருத்தரங்கமும் நடக்கும். ஆனால், இப்போது அது போல இல்லை இரவில் ஒரு பெட்டி மத்தாப்பு பகலில் ஒரு சரவெடியுடன் முடிகிறது. தொலைக்காட்சி தான் கதியாகிவிட்டது. அன்டை வீட்டுக்கு கூட செல்வதில்லை. புணிதப் பண்டிகையில் மது அருந்தி விபத்துகளை உண்டாக்குகின்றனர். தொலைக்காட்சியில் காண்பிக்கும் படங்கள் நம் பார்த்தவை தான். நிகழ்ச்சிகளை இணையத்திலும் பார்க்கலாம். ஆனால், நம் உறவினர்கள் நண்பர்களை அன்று சந்திப்பது அவர்களுக்கு வீட்டுக்கு செல்லது என உறவுகளை பலப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி அணைத்து விட்டு, நம் சமூக வலைதளங்களுக்கும் விடுமுறை விட்டு, பாரம்பரிய முறைப்படி பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். பாதுகாப்பாக ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். வெடிகளை செங்குத்தாக வைத்து முகத்தை தூர வைத்துக் கொண்டு வெடிக்க வேண்டும். வெடிக்காத வெடியின் அருகில் செல்ல வேண்டாம். புஸ்வானத்தை பற்ற வைக்கும் தூர உக்கார்ந்து கொண்டு பக்கவாட்டில் இருந்து வைக்கலாம். சங்கு சக்கரம் பற்ற வில்லை என்றால் கைகளில் தொட வேண்டாம் சென்ற வருடம் என் கையிலே சங்கு சக்கரம் வெடித்துவிட்டது. வெடிகளை கையில் கொளுத்தி போட வேண்டாம், தீபாவளி திரைப்படங்களும் வேண்டாம் .பாதுகாப்பாக பட்டாசு வெடித்து இன்பமாக கொண்டாடுவோம்! தீபாவளி நல்வாழ்த்துக்களுடன். வி.ராஜமருதவேல்.