Sunday, March 23, 2014

ராணி வேலு நாச்சியார்


. ராணி வேலு நாச்சியார்
வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர். உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர். ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரை வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார். அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் மன்னர் வளரிவீச்சீல் பல எதிகளை கொன்றார். நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர் இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். வேலு நாச்சியார். காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார். அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர். அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் . விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார். இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார். மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது. ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார். தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார். சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார். மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.இந்நாளில் அவரை வணங்குவோம். -வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)

அடல் பிகாரிவாஜ்பாய்


அடல் பிகாரிவாஜ்பாய் பிறந்த நாள் இன்று. இந்திய நாட்டின் சிறந்த பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை வாழ்த்துவோம்! அடல் பிகாரிவாஜ்பாய் என்பது தான் பெயர். கிருஷ்ணா பிகாரிவாஜ்பாய்க்கும் கிருஷ்ணதேவிக்கும் மகனாய் 1924- டிசம்பர்-25 ல் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் பிறந்தார். சிறு வயதிலே தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவராய் வளர்ந்தார். இளம் வயதிலேயே கவிஞராய் திகழ்ந்தார். பின்னர் ஜான்சிராணி லட்சுமிபாய் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். சிலகாலம் பத்திரிகையாளராய் பணியாற்றினார். விடுதலை உணர்வை எழுத்தில் பதித்தார்.1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போரட்டத்தில் கலந்து கொண்டதிற்காக சிறை சென்றார். நாட்டு விடுதலைக்குப்பின் ஜனசங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதி தீவிர செயல்பாட்டால் நன்மதிப்பை பெற்றார். "நேரு பண்டிட் அவர்கள் அடலின் பணிகளை பார்த்து எதிர்கால இந்தியாவின் பிரதமர் நீதான்" என வாழ்த்தினார். வாஜ்பாய் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார்.அல்மா மாத்தர் என்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து வைத்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரான போது வாஜ்பாயை வெளியுறவுத்துறை அமைச்சரானர். அமைச்சர் பணியை திறம்பட செய்தார். அதனால் சிறந்த பார்லிமென்ட்ரியனாக தேர்ந்தேடுக்கப்பட்டார். பின் பாரதியஜனதா கட்சியின் முதல் தலைவரானார்.1992 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷனை பெற்றார். 1996 ல் 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.1998-99 பிறகு 13மாதமும், பிறகு 1999-04 வரை பிரதமராக தொடர்ந்து ஆட்சி செய்தார். அவரின் சாதனகள்: அனைத்து பிரதமரும் புறக்கணிக்கும் தமிழகம், ஆந்திரா, பிகார், பஞ்சாப், மத்தியபிரதேசப்பகுதிக்கு முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தானை எதிரியாக நினைக்காமல் நட்பு நாடக்க முயற்சி செய்தார். டெல்லி- லாகுர் பேருந்து பயணம் செய்தார். பாகிஸ்தானுக்கு ரயில்சேவையை துவக்கினார். இந்திய- பாக் ஒற்றுமைக்கு உழைத்தார். அதே நேரம் 1998-May அணு குண்டு சோதனை செய்தார் இதனால் வந்த பல பொருளாதார தடையை உடைத்தார். பாக் கார்கிலை ஆக்ரமித்தபோது போர் நடத்தி கார்கிலை மீட்டார். பாகிஸ்தான், இந்திய விமானி நசிகேதாவை உயிருடன் ஒப்படைத்து சமாதானத்திற்கு அடிகோலியது போருக்கு பின் அமைதியை கடைபிடித்தார்.இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, பரிசோதனை செய்யமால் கடத்தல்காரரின் கோரிக்கையை ஏற்று பயணிகளை காப்பாற்றினார். சீனாவை வாய்த்திறக்காமல் வைத்திருந்தார். இலங்கை ராணுவம், இந்திய மீனவரை தாக்கிய போது இலங்கையை கடுமையாக எச்சரித்தார் இலங்கை பிரதமர் ரணிலை கண்டித்து இனி தாக்குதல் நடந்தால் இலங்கை இருக்காது என எச்சரித்தார். அவர் காலத்தில் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இலங்கைக்காண ஆயுத பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இதனால், விடுதலைபுலிகள் வெற்றிகளை குவித்தனர் பிரபாகரன் விரும்பியதும் வாஜ்பாய் ஆட்சியை தான். அமேரிக்காவுக்கிற்கு நட்பாகவும் அதே சமயம் பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தார். இந்தியாவை தங்க நாற்கர சாலையால் இணைத்தார். முதியோர் உதவி தொகை, சிக்ஷா அபியான் மூலம் எளியோர் வாழ்கையை உயர்த்தினார் நதிநீர் இணைப்பை செய்ய நினைத்தார் இதனால் பல மாநிலம் வளம் .இந்திய வல்லரசு கனவை நினைவாக்க அப்துல் கலாமை அதிபர் ஆக்கினார். வாஜ்பாய் தன் கவிதையை தமிழில் மொழிமாற்றம் செய்து அண்ணாவிற்கு அர்ப்பணித்தார் நாட்டை உயர்த்தியவரின் பெருமை போற்றுவோம்! -வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)