Sunday, March 23, 2014

அடல் பிகாரிவாஜ்பாய்


அடல் பிகாரிவாஜ்பாய் பிறந்த நாள் இன்று. இந்திய நாட்டின் சிறந்த பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை வாழ்த்துவோம்! அடல் பிகாரிவாஜ்பாய் என்பது தான் பெயர். கிருஷ்ணா பிகாரிவாஜ்பாய்க்கும் கிருஷ்ணதேவிக்கும் மகனாய் 1924- டிசம்பர்-25 ல் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் பிறந்தார். சிறு வயதிலே தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவராய் வளர்ந்தார். இளம் வயதிலேயே கவிஞராய் திகழ்ந்தார். பின்னர் ஜான்சிராணி லட்சுமிபாய் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். சிலகாலம் பத்திரிகையாளராய் பணியாற்றினார். விடுதலை உணர்வை எழுத்தில் பதித்தார்.1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போரட்டத்தில் கலந்து கொண்டதிற்காக சிறை சென்றார். நாட்டு விடுதலைக்குப்பின் ஜனசங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதி தீவிர செயல்பாட்டால் நன்மதிப்பை பெற்றார். "நேரு பண்டிட் அவர்கள் அடலின் பணிகளை பார்த்து எதிர்கால இந்தியாவின் பிரதமர் நீதான்" என வாழ்த்தினார். வாஜ்பாய் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார்.அல்மா மாத்தர் என்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து வைத்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரான போது வாஜ்பாயை வெளியுறவுத்துறை அமைச்சரானர். அமைச்சர் பணியை திறம்பட செய்தார். அதனால் சிறந்த பார்லிமென்ட்ரியனாக தேர்ந்தேடுக்கப்பட்டார். பின் பாரதியஜனதா கட்சியின் முதல் தலைவரானார்.1992 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷனை பெற்றார். 1996 ல் 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.1998-99 பிறகு 13மாதமும், பிறகு 1999-04 வரை பிரதமராக தொடர்ந்து ஆட்சி செய்தார். அவரின் சாதனகள்: அனைத்து பிரதமரும் புறக்கணிக்கும் தமிழகம், ஆந்திரா, பிகார், பஞ்சாப், மத்தியபிரதேசப்பகுதிக்கு முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தானை எதிரியாக நினைக்காமல் நட்பு நாடக்க முயற்சி செய்தார். டெல்லி- லாகுர் பேருந்து பயணம் செய்தார். பாகிஸ்தானுக்கு ரயில்சேவையை துவக்கினார். இந்திய- பாக் ஒற்றுமைக்கு உழைத்தார். அதே நேரம் 1998-May அணு குண்டு சோதனை செய்தார் இதனால் வந்த பல பொருளாதார தடையை உடைத்தார். பாக் கார்கிலை ஆக்ரமித்தபோது போர் நடத்தி கார்கிலை மீட்டார். பாகிஸ்தான், இந்திய விமானி நசிகேதாவை உயிருடன் ஒப்படைத்து சமாதானத்திற்கு அடிகோலியது போருக்கு பின் அமைதியை கடைபிடித்தார்.இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, பரிசோதனை செய்யமால் கடத்தல்காரரின் கோரிக்கையை ஏற்று பயணிகளை காப்பாற்றினார். சீனாவை வாய்த்திறக்காமல் வைத்திருந்தார். இலங்கை ராணுவம், இந்திய மீனவரை தாக்கிய போது இலங்கையை கடுமையாக எச்சரித்தார் இலங்கை பிரதமர் ரணிலை கண்டித்து இனி தாக்குதல் நடந்தால் இலங்கை இருக்காது என எச்சரித்தார். அவர் காலத்தில் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இலங்கைக்காண ஆயுத பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இதனால், விடுதலைபுலிகள் வெற்றிகளை குவித்தனர் பிரபாகரன் விரும்பியதும் வாஜ்பாய் ஆட்சியை தான். அமேரிக்காவுக்கிற்கு நட்பாகவும் அதே சமயம் பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தார். இந்தியாவை தங்க நாற்கர சாலையால் இணைத்தார். முதியோர் உதவி தொகை, சிக்ஷா அபியான் மூலம் எளியோர் வாழ்கையை உயர்த்தினார் நதிநீர் இணைப்பை செய்ய நினைத்தார் இதனால் பல மாநிலம் வளம் .இந்திய வல்லரசு கனவை நினைவாக்க அப்துல் கலாமை அதிபர் ஆக்கினார். வாஜ்பாய் தன் கவிதையை தமிழில் மொழிமாற்றம் செய்து அண்ணாவிற்கு அர்ப்பணித்தார் நாட்டை உயர்த்தியவரின் பெருமை போற்றுவோம்! -வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)

No comments:

Post a Comment