Friday, July 4, 2014
சிங்கப்பூர் .ஆசியாவின் அழகிய நகரம்
சிங்கப்பூர்-ஆசியாவின் அழகிய தீவு நகரம் SINGAPORE- the BEAuTYFUL CITY OF ASIA
AUTHOR: V.RAJAMARUTHAVEL
எழுத்து :வி.ராஜமருதவேல்
ஆசியாவின் அழகிய தீவு நகரமான சிங்கப்பூரை பற்றியும் அதன் உங்களுக்கு விளக்குவதே என்னுடைய நோக்கமாகும்.
தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்(Tamil history and culture)என்ற ட்தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களைப்பற்றி எழுதிய நான் தமிழர்கள் பெருமையுடன் வாழும் சிங்க்ப்பூரைப் பற்றிய பெருமைகளை எழுதவே இங்கு வந்துள்ளேன்.
சிங்கப்பூர் வந்து இறங்கியவுடனே இங்கு முதலில் கற்றுக்கொண்டது ஒழுங்கு முறைகளைத் தான்.மக்கள் வரிசையாக செல்வதும் நகரின் துய்மையும் மெச்சும்படி உள்ளது.சாலை விதிகள் மிகச்சிறப்புடன் உள்ளது.குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுதல் ,மற்றவரிடம் மரியாதையுடன் பேசுதல் சிங்கப்பூரின் உயர்ந்த பண்பாடாகும்.உலகின் மிக நேர்மையான நாடு.ஊழலற்ற நிர்வாகம் இந்நாட்டின் வெற்றிக்கு காரணம்.
2014ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நகரம் எது என்று கண்டறிவதற்காக 131 நகரங்களில், எக்கனொமிஸ்ட் இண்டர்லிஜண்ட் யுனிட் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முன்னணியில் திகழ்கிறது. சிங்கப்பூர் உலகிலேயே பத்தாவது அதிகம் செலவாமிக்க நாடாகும். அறுபத்துமூன்று தீவுகளை கொண்ட நாடு. சிங்கப்பூர் நகரமும் ஒரு தீவுதான். உலகின் நான்காவது பொருளாதார உயர்வு கொண்ட நாடு.
சிங்கப்பூர் வரலாறு:
தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு தீவுகளும் உள்ளன. சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் மிகச்சிறிய நாடாகும். சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.ஆனால் இப்பகுதியில் சிங்கம் இருக்க வாய்ப்பு குறைவே.
பழைய சிங்கப்பூர் கி.பி.213ஆம் ஆண்டளவிலே மலேய தீபகற்பத்தின் முடிவிலே பு-லூ-சுங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டளவிலே தெமாசக் எனும் கடல் மாவட்டக் குடியிருப்புகளைப் பற்றி சாவனியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பகுதி இந்தோனேசிய ஸ்ரீவிசய பேரரசின் ஓர் பகுதியாக இருந்தது. பாலிம்பாங்கை ஆண்டுவந்த மன்னர், தெமாசக் மாவட்டத்தைச் சிங்கப்பூர் என்று பதிமூன்றாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அழைக்கத் தொடங்கினார். இத்தீவின் மன்னர் மஜபாகிட் அரசரால் 1376இல் தோற்கடிக்கப்பட்டவுடன் இத்தீவின் முக்கியத்துவம் நலியத் தொடங்கியது.
தற்கால சிங்கப்பூரை 1819ஆம் ஆண்டில் அமைத்தவர் சர் ஸ்டாபோர்டு ராஃபில்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காகத் தேடிச் சென்று 1819இல் சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார். அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த சுல்தான்களிடமிருந்து உரிமை பெற்றார். 1819ஆம் ஆண்டளவிலே சிங்கப்பூர் மீன்பிடிப்பவர்களின் ஒரு சிறு கிராமமாக விளங்கியது. அச்சமயத்தில் அக்கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்களும் மலேயர்களும், சீனர்களும் ஆவார்கள்.பிறகு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வந்தனர்.
. ராஃபில்ஸ் எடுத்த முயற்சியால் சிங்கப்பூர் முக்கியமான துறைமுகமாகவும் தென்கிழக்காசியாவின் சிறப்பான வாணிபத்தலமாகவும் மாறியது.
சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சி கண்ட ஒரு நாடு. சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும்
சுற்றுலா:
சிங்கப்பூர் ஒரு சிறிய தீவானாலும் அதில் பார்க்க கூடிய இடங்கள் பல. சிங்கப்பூருக்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிங்கப்பூர் தீவு சுற்றுலாவாசிகளுக்கு அமைதியாக வசிக்க உகந்த இடம் ஆகும். சிங்கபூருக்கு அதிக வருமானம் சுற்றுலாவாசிகளால் வருகிறது.
சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், ‘’சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர்’’ என்று கூறுகிறது.
தட்பவெட்ப நிலையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் இந்தியாவுடன் அதிகம் ஒத்துப் போகும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமான போக்குவரத்து இருப்பதால், சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவதில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
டேங் ரோடு முருகன் கோவில் மிகவும் பழமையானது.உலகின் முதல் கடற்கரை தோட்டம், உலகின் பெரிய ராட்டினம்,இரண்டு சூதாட்ட மையம் போன்ற புதிய சுற்றுலா அம்சங்கள் பயணிகளை கவரும் என்பது திண்ணம்.மொத்தத்தில் .சிங்கப்பூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
சென்டோஸா :
சிங்கப்பூரை ஒட்டியுள்ள தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும்.தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது. எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் Under Water world மற்றும் Dolphin Lagoon மட்டுமே பார்க்க முடிந்தது. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள். வாட்டர் வேர்ல்டு ரொம்ப எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் சென்டோஸா-வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்று நிச்சயம் சொல்லலாம். இங்கு 6 டாலர் கொடுத்தால் இரண்டு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் டால்பின் லகூன் சென்று ரொம்ப நேரம் காத்திருந்து, டால்பின்கள் ஒரு சின்னப்பெண் சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் செய்வதைப் பார்த்தோம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான இடம்.
தண்ணீர்:
ஒரு நகரின் அடிப்படைத் தேவைகளான தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், இலகுவான பொதுபோக்குவரத்து சேவை ஆகியவற்றை மக்களுக்குச் சிறப்பாக அளித்து உலகின் சிறந்த நகரமைப்பு நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர். 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்.
சாலைகளில் குப்பையைப் பார்க்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள சந்து பொந்து சாலைகளில் கூட ஒரு குண்டு குழியைக் காணமுடியவில்லை. நம்மூரில் சாலைகளில் காணப்படும் சிறு சிறு ஒட்டு வேலைகள் அங்குத் தென்படவே இல்லை என்பது கூடுதல் தகவல்.
நமது நாட்டில் சாலைகளுக்குப் பயன்படுத்தும் அதே தாரைத்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள. மையப்பகுதியில் இருந்து இடது ஓரத்துக்கு நீர் வழிந்தோடும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளின் ஓரங்களில் மரங்களுக்கு நீர் கிடைக்கும் வகையில் அவற்றைச் சுற்றிப் புல்தரையைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் மழைநீர் புகுந்து, மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக நகரில் உள்ள நீர் சேகரிப்பு மையங்களை நோக்கி ஓடுகின்றன. இதனால் வெள்ளப் பெருக்கோ, நீர் தேக்கமோ கிடையவே கிடையாது.
இந்த நகரத்தில் எங்குமே இதுவரை நிலத்தடி குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைத்ததே இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. அதை உணர்ந்துதான் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதிகளை மழை நீர் சேகரிப்புக்கேற்றவாறு அரசு மாற்றியுள்ளது, இன்றும் குறிப்பிட்ட அளவு குடிநீரை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர் அரசு இதுதவிர, வீடுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர், சொட்டுக் கூட விரயமாகாமல், நகர் முழுவதும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பிரத்தியேக ராட்சத குழாய்கள் மூலம், நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மழை நீரைச் சேகரிக்கத் தனியாக வேறு நிலத்தடி குழாய்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் நீரை நியூவாட்டர் (Newater) என்று அவர்கள் அழைக்கின்றனர். சவ்வூடு பரவல் , நவீன உத்திகள் மூலமாக இந்நீர் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும், இதில் தாதுச்சத்துக்கள் குறைவாக உள்ளதால், அதிக அளவில் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆனால், சுத்தமான நீர் தேவைப்படும் தொழிற்சாலைகளில் முழுக்க, முழுக்க நியூவாட்டரே பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நியூவாட்டரின் ஒரு பகுதியை மழைநீர் சேகரிப்பு மூலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரிலும் கலக்கிறார்கள். சிங்கப்பூரின் 30 சதவீத தேவையை நியூவாட்டர் பூர்த்தி செய்கிறது. ஆனால் குழாயைத் திறந்ததும் காய்ச்சாமல் குடிக்கும் வகையில், பாதுகாப்பான குடிநீர் வருவதை அரசு உறுதி செய்துள்ளது.
டாவொயிசம்
புத்தமதம்
சீனக்கலாச்சாரம்
மலாய் கலாச்சாரம்
உணவுமுறைகள
டாவோயிசம் ஹிந்துயிச ஒற்றுமைகள்……… அடுத்த கட்டுரையில்
V.RAJAMARUTHAVEL
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment