Friday, July 4, 2014

சிங்கப்பூர் .ஆசியாவின் அழகிய நகரம்

சிங்கப்பூர்-ஆசியாவின் அழகிய தீவு நகரம் SINGAPORE- the BEAuTYFUL CITY OF ASIA AUTHOR: V.RAJAMARUTHAVEL எழுத்து :வி.ராஜமருதவேல் ஆசியாவின் அழகிய தீவு நகரமான சிங்கப்பூரை பற்றியும் அதன் உங்களுக்கு விளக்குவதே என்னுடைய நோக்கமாகும். தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்(Tamil history and culture)என்ற ட்தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களைப்பற்றி எழுதிய நான் தமிழர்கள் பெருமையுடன் வாழும் சிங்க்ப்பூரைப் பற்றிய பெருமைகளை எழுதவே இங்கு வந்துள்ளேன். சிங்கப்பூர் வந்து இறங்கியவுடனே இங்கு முதலில் கற்றுக்கொண்டது ஒழுங்கு முறைகளைத் தான்.மக்கள் வரிசையாக செல்வதும் நகரின் துய்மையும் மெச்சும்படி உள்ளது.சாலை விதிகள் மிகச்சிறப்புடன் உள்ளது.குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுதல் ,மற்றவரிடம் மரியாதையுடன் பேசுதல் சிங்கப்பூரின் உயர்ந்த பண்பாடாகும்.உலகின் மிக நேர்மையான நாடு.ஊழலற்ற நிர்வாகம் இந்நாட்டின் வெற்றிக்கு காரணம். 2014ஆம் ஆண்டில் வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நகரம் எது என்று கண்டறிவதற்காக 131 நகரங்களில், எக்கனொமிஸ்ட் இண்டர்லிஜண்ட் யுனிட் என்னும் அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முன்னணியில் திகழ்கிறது. சிங்கப்பூர் உலகிலேயே பத்தாவது அதிகம் செலவாமிக்க நாடாகும். அறுபத்துமூன்று தீவுகளை கொண்ட நாடு. சிங்கப்பூர் நகரமும் ஒரு தீவுதான். உலகின் நான்காவது பொருளாதார உயர்வு கொண்ட நாடு. சிங்கப்பூர் வரலாறு: தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு தீவுகளும் உள்ளன. சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் மிகச்சிறிய நாடாகும். சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.ஆனால் இப்பகுதியில் சிங்கம் இருக்க வாய்ப்பு குறைவே. பழைய சிங்கப்பூர் கி.பி.213ஆம் ஆண்டளவிலே மலேய தீபகற்பத்தின் முடிவிலே பு-லூ-சுங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டளவிலே தெமாசக் எனும் கடல் மாவட்டக் குடியிருப்புகளைப் பற்றி சாவனியர்கள் குறிப்பிடுகின்றனர். இப்பகுதி இந்தோனேசிய ஸ்ரீவிசய பேரரசின் ஓர் பகுதியாக இருந்தது. பாலிம்பாங்கை ஆண்டுவந்த மன்னர், தெமாசக் மாவட்டத்தைச் சிங்கப்பூர் என்று பதிமூன்றாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அழைக்கத் தொடங்கினார். இத்தீவின் மன்னர் மஜபாகிட் அரசரால் 1376இல் தோற்கடிக்கப்பட்டவுடன் இத்தீவின் முக்கியத்துவம் நலியத் தொடங்கியது. தற்கால சிங்கப்பூரை 1819ஆம் ஆண்டில் அமைத்தவர் சர் ஸ்டாபோர்டு ராஃபில்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்திற்காகத் தேடிச் சென்று 1819இல் சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார். அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த சுல்தான்களிடமிருந்து உரிமை பெற்றார். 1819ஆம் ஆண்டளவிலே சிங்கப்பூர் மீன்பிடிப்பவர்களின் ஒரு சிறு கிராமமாக விளங்கியது. அச்சமயத்தில் அக்கிராமத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்களும் மலேயர்களும், சீனர்களும் ஆவார்கள்.பிறகு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் வந்தனர். . ராஃபில்ஸ் எடுத்த முயற்சியால் சிங்கப்பூர் முக்கியமான துறைமுகமாகவும் தென்கிழக்காசியாவின் சிறப்பான வாணிபத்தலமாகவும் மாறியது. சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சி கண்ட ஒரு நாடு. சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும் சுற்றுலா: சிங்கப்பூர் ஒரு சிறிய தீவானாலும் அதில் பார்க்க கூடிய இடங்கள் பல. சிங்கப்பூருக்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. சிங்கப்பூர் தீவு சுற்றுலாவாசிகளுக்கு அமைதியாக வசிக்க உகந்த இடம் ஆகும். சிங்கபூருக்கு அதிக வருமானம் சுற்றுலாவாசிகளால் வருகிறது. சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர். இது குறித்து சிங்கப்பூர் சுற்றுலா வாரியம், ‘’சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவோரில் இந்தியர்கள் 2வது இடத்தில் உள்ளனர்’’ என்று கூறுகிறது. தட்பவெட்ப நிலையிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் இந்தியாவுடன் அதிகம் ஒத்துப் போகும் நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமான போக்குவரத்து இருப்பதால், சிங்கப்பூருக்கு சுற்றுலா வருவதில் இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். டேங் ரோடு முருகன் கோவில் மிகவும் பழமையானது.உலகின் முதல் கடற்கரை தோட்டம், உலகின் பெரிய ராட்டினம்,இரண்டு சூதாட்ட மையம் போன்ற புதிய சுற்றுலா அம்சங்கள் பயணிகளை கவரும் என்பது திண்ணம்.மொத்தத்தில் .சிங்கப்பூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சென்டோஸா : சிங்கப்பூரை ஒட்டியுள்ள தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும்.தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது. எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் Under Water world மற்றும் Dolphin Lagoon மட்டுமே பார்க்க முடிந்தது. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள். வாட்டர் வேர்ல்டு ரொம்ப எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று கேட்டால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் சென்டோஸா-வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்று நிச்சயம் சொல்லலாம். இங்கு 6 டாலர் கொடுத்தால் இரண்டு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் டால்பின் லகூன் சென்று ரொம்ப நேரம் காத்திருந்து, டால்பின்கள் ஒரு சின்னப்பெண் சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் செய்வதைப் பார்த்தோம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான இடம். தண்ணீர்: ஒரு நகரின் அடிப்படைத் தேவைகளான தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், இலகுவான பொதுபோக்குவரத்து சேவை ஆகியவற்றை மக்களுக்குச் சிறப்பாக அளித்து உலகின் சிறந்த நகரமைப்பு நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர். 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். சாலைகளில் குப்பையைப் பார்க்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள சந்து பொந்து சாலைகளில் கூட ஒரு குண்டு குழியைக் காணமுடியவில்லை. நம்மூரில் சாலைகளில் காணப்படும் சிறு சிறு ஒட்டு வேலைகள் அங்குத் தென்படவே இல்லை என்பது கூடுதல் தகவல். நமது நாட்டில் சாலைகளுக்குப் பயன்படுத்தும் அதே தாரைத்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள. மையப்பகுதியில் இருந்து இடது ஓரத்துக்கு நீர் வழிந்தோடும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளின் ஓரங்களில் மரங்களுக்கு நீர் கிடைக்கும் வகையில் அவற்றைச் சுற்றிப் புல்தரையைப் போட்டு வைத்திருக்கிறார்கள். சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் மழைநீர் புகுந்து, மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக நகரில் உள்ள நீர் சேகரிப்பு மையங்களை நோக்கி ஓடுகின்றன. இதனால் வெள்ளப் பெருக்கோ, நீர் தேக்கமோ கிடையவே கிடையாது. இந்த நகரத்தில் எங்குமே இதுவரை நிலத்தடி குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைத்ததே இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. அதை உணர்ந்துதான் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதிகளை மழை நீர் சேகரிப்புக்கேற்றவாறு அரசு மாற்றியுள்ளது, இன்றும் குறிப்பிட்ட அளவு குடிநீரை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர் அரசு இதுதவிர, வீடுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர், சொட்டுக் கூட விரயமாகாமல், நகர் முழுவதும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பிரத்தியேக ராட்சத குழாய்கள் மூலம், நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மழை நீரைச் சேகரிக்கத் தனியாக வேறு நிலத்தடி குழாய்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் நீரை நியூவாட்டர் (Newater) என்று அவர்கள் அழைக்கின்றனர். சவ்வூடு பரவல் , நவீன உத்திகள் மூலமாக இந்நீர் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும், இதில் தாதுச்சத்துக்கள் குறைவாக உள்ளதால், அதிக அளவில் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், சுத்தமான நீர் தேவைப்படும் தொழிற்சாலைகளில் முழுக்க, முழுக்க நியூவாட்டரே பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நியூவாட்டரின் ஒரு பகுதியை மழைநீர் சேகரிப்பு மூலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரிலும் கலக்கிறார்கள். சிங்கப்பூரின் 30 சதவீத தேவையை நியூவாட்டர் பூர்த்தி செய்கிறது. ஆனால் குழாயைத் திறந்ததும் காய்ச்சாமல் குடிக்கும் வகையில், பாதுகாப்பான குடிநீர் வருவதை அரசு உறுதி செய்துள்ளது. டாவொயிசம் புத்தமதம் சீனக்கலாச்சாரம் மலாய் கலாச்சாரம் உணவுமுறைகள டாவோயிசம் ஹிந்துயிச ஒற்றுமைகள்……… அடுத்த கட்டுரையில் V.RAJAMARUTHAVEL

Sunday, March 23, 2014

ராணி வேலு நாச்சியார்


. ராணி வேலு நாச்சியார்
வீரத்தின் அடையாளமாகவும் வெற்றித் திருவுருமாகவும் விளங்குகிறார் அவர். உலகில் மிகப்பழமையான பாதுகாப்பு இனமாகவும் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில் 1730ஆம் ஆண்டு,உதித்தவர் தான் வேலு நாச்சியார்.தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். வேலுநாச்சியார் பிறந்தது ‘சக்கந்தி’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். ராமநாதபுரத்தின் இளவரசியான அவர் மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். மேலும் அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், இங்கிலிஷ், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர். சிறு வயதிலேயே போர்கலைகளிலும் தேர்ந்தவராக விளங்கினார். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர். ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகில் மயிலாகவும் வீரத்தில் விட்டு கொடுக்காத புலியாக இருக்கும் அவரை வீரத்தையும் அழகையும் கண்டு காதல்வயப்பட்டு சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதத்தேவர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார். 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையை விரட்டியடித்தார். அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்தனர் கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர் மன்னர் வளரிவீச்சீல் பல எதிகளை கொன்றார். நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர் இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். வேலு நாச்சியார். காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார். அமைச்சர் தாண்டவராய பிள்ளை, தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என உரைத்தனர். அரசியையும் வெள்ளச்சி நாச்சியார்யையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் . விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார். இன்று தெய்வமாக அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார். மறவர் சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது. ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார். தேசப்பற்று மிக்க குயிலி என்ற பெண் உடலில் தீ மூட்டி கம்பனியின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார். தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர்பிச்சை அளிக்குமாறு வேண்டினர் ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர் மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது அதர்மம் ஆதலால் மன்னிப்பு அளித்தார். சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார். மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25டிசம்பர் 1796 இறந்தார்.உலகில் எந்த ராணியும் ராணி வேலு நாச்சியாருக்கு இணையாக முடியாது.இந்நாளில் அவரை வணங்குவோம். -வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)

அடல் பிகாரிவாஜ்பாய்


அடல் பிகாரிவாஜ்பாய் பிறந்த நாள் இன்று. இந்திய நாட்டின் சிறந்த பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை வாழ்த்துவோம்! அடல் பிகாரிவாஜ்பாய் என்பது தான் பெயர். கிருஷ்ணா பிகாரிவாஜ்பாய்க்கும் கிருஷ்ணதேவிக்கும் மகனாய் 1924- டிசம்பர்-25 ல் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் பிறந்தார். சிறு வயதிலே தெய்வ பக்தியும் தேச பக்தியும் மிக்கவராய் வளர்ந்தார். இளம் வயதிலேயே கவிஞராய் திகழ்ந்தார். பின்னர் ஜான்சிராணி லட்சுமிபாய் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். சிலகாலம் பத்திரிகையாளராய் பணியாற்றினார். விடுதலை உணர்வை எழுத்தில் பதித்தார்.1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போரட்டத்தில் கலந்து கொண்டதிற்காக சிறை சென்றார். நாட்டு விடுதலைக்குப்பின் ஜனசங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதி தீவிர செயல்பாட்டால் நன்மதிப்பை பெற்றார். "நேரு பண்டிட் அவர்கள் அடலின் பணிகளை பார்த்து எதிர்கால இந்தியாவின் பிரதமர் நீதான்" என வாழ்த்தினார். வாஜ்பாய் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை கடைபிடித்தார்.அல்மா மாத்தர் என்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து திருமணமும் செய்து வைத்தார். மொரார்ஜி தேசாய் பிரதமரான போது வாஜ்பாயை வெளியுறவுத்துறை அமைச்சரானர். அமைச்சர் பணியை திறம்பட செய்தார். அதனால் சிறந்த பார்லிமென்ட்ரியனாக தேர்ந்தேடுக்கப்பட்டார். பின் பாரதியஜனதா கட்சியின் முதல் தலைவரானார்.1992 ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷனை பெற்றார். 1996 ல் 13 நாட்கள் பிரதமராக இருந்தார்.1998-99 பிறகு 13மாதமும், பிறகு 1999-04 வரை பிரதமராக தொடர்ந்து ஆட்சி செய்தார். அவரின் சாதனகள்: அனைத்து பிரதமரும் புறக்கணிக்கும் தமிழகம், ஆந்திரா, பிகார், பஞ்சாப், மத்தியபிரதேசப்பகுதிக்கு முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தானை எதிரியாக நினைக்காமல் நட்பு நாடக்க முயற்சி செய்தார். டெல்லி- லாகுர் பேருந்து பயணம் செய்தார். பாகிஸ்தானுக்கு ரயில்சேவையை துவக்கினார். இந்திய- பாக் ஒற்றுமைக்கு உழைத்தார். அதே நேரம் 1998-May அணு குண்டு சோதனை செய்தார் இதனால் வந்த பல பொருளாதார தடையை உடைத்தார். பாக் கார்கிலை ஆக்ரமித்தபோது போர் நடத்தி கார்கிலை மீட்டார். பாகிஸ்தான், இந்திய விமானி நசிகேதாவை உயிருடன் ஒப்படைத்து சமாதானத்திற்கு அடிகோலியது போருக்கு பின் அமைதியை கடைபிடித்தார்.இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, பரிசோதனை செய்யமால் கடத்தல்காரரின் கோரிக்கையை ஏற்று பயணிகளை காப்பாற்றினார். சீனாவை வாய்த்திறக்காமல் வைத்திருந்தார். இலங்கை ராணுவம், இந்திய மீனவரை தாக்கிய போது இலங்கையை கடுமையாக எச்சரித்தார் இலங்கை பிரதமர் ரணிலை கண்டித்து இனி தாக்குதல் நடந்தால் இலங்கை இருக்காது என எச்சரித்தார். அவர் காலத்தில் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இலங்கைக்காண ஆயுத பொருளாதார உதவிகளை நிறுத்தினார். இதனால், விடுதலைபுலிகள் வெற்றிகளை குவித்தனர் பிரபாகரன் விரும்பியதும் வாஜ்பாய் ஆட்சியை தான். அமேரிக்காவுக்கிற்கு நட்பாகவும் அதே சமயம் பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தார். இந்தியாவை தங்க நாற்கர சாலையால் இணைத்தார். முதியோர் உதவி தொகை, சிக்ஷா அபியான் மூலம் எளியோர் வாழ்கையை உயர்த்தினார் நதிநீர் இணைப்பை செய்ய நினைத்தார் இதனால் பல மாநிலம் வளம் .இந்திய வல்லரசு கனவை நினைவாக்க அப்துல் கலாமை அதிபர் ஆக்கினார். வாஜ்பாய் தன் கவிதையை தமிழில் மொழிமாற்றம் செய்து அண்ணாவிற்கு அர்ப்பணித்தார் நாட்டை உயர்த்தியவரின் பெருமை போற்றுவோம்! -வி. ராஜமருதவேல் (copyrights reserved by rajamaruthavel-காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.)

Monday, November 4, 2013

தீபாவளி ஒரு இனிய திருநாள்


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திரைவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம். ஆங்கிலப்புத்தாண்டு, காதலர்தினம், நண்பர்கள்தினம் போன்ற இறக்குமதி விழாவை கொண்டாடும் போது நம் பாரம்பரிய பண்டிகையை மிகச்சிறப்புடன் கொண்டாடுவோம். தமிழர்கள் அளவுக்கு தீபாவளியை சிறப்புடன் கொண்டாடுபவர் யவரும் இலர். தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது சமண சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தற்போது மாற்று சமயத்தினரும் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை எடுக்கின்றனர் பட்டாசு வெடிக்கின்றனர். நாமும் அவர்களுக்கு தீபாவளி பலகாரம் முதலில் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்: கிருஸ்ணர்
என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது. இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு,தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது. சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றிணைகிறார். இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக கூறுகின்றனர். சீக்கியர்களின் தீபாவளி சீக்கியர்கள் 1577-இல் தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையொட்டி கொண்டாடிய மகிழ்ச்சிகரமான கொண்டாட்டம் இத் தீபாவளி என்கின்றனர். சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி . கங்காஸ்நானம்: தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும்.வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று எண்ணை தேய்த்து தான் குளிக்க வேண்டும்.ஏன் என்றால் நரகாசுரனின் நினைவு நாள் அதனால் தீட்டு கழிக்கிறோம். பலவிதமான பலகாரங்கள் செய்கிறோம். அதில் முறுக்கு, அதிரசமே முதன்மையானது சீப்பு முறுக்கு, சோமாசா, பொக்குசா முறுக்கு , ஒல பக்கோடா ,நெய் உருண்டை, கெட்டி உருண்டை ,ரவா உருண்டை, சீடை, அல்வா , குலோப்ஜாமுன், பாதாம் அல்வா, தேங்காய்பாரை வரை நீள்கிறது. இது மட்டுமல்லாது நரகாசுரன் நினைவு நாள் என்பதால் அன்று வடையும் ,சுழியமும் வைத்து படைக்கப்படுகிறது. தீபாவளி அன்று உள்ளுர் கோவில்களில் வழிபடுவது சிறப்பு. இன்று தீபாவளி என்பது ஏதோ கடமையை கழித்தல் போல் ஆகிவிட்டது.கடைகளில் பலகாரங்களில் வாங்கப்படுகிறது. கிராமங்களில் தான் தீபாவளி உயிர்ப்புடன் கொஞ்சம் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதம் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள், தீபாவளிக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே வெடிச்சத்தம் காதை பிளக்கும், தீபாவளிக்கு முதல் நாளில் விண்ணை முட்டும் புகை மண்டலம் தான். இதில் நான் ராஜமருதவேல் பக்கத்து வீட்டுடன் போட்டி தான். முன்பெல்லாம் நான் இருநாட்களாக தீபாவளிக்கு தனியாக பட்டாசு வெடிப்பேன் தொடர்ச்சியாக. பக்கத்து வீட்டில் தீபாவளிக்கு ஆறு பேருக்கும் மேல் தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பார்கள் வெற்றி அவர்களுக்கு தான். சைக்கிள் பெல் மூடி, கொட்டாங்குச்சி,மாட்டு சாணம்,பிளாஸ்டிக் டப்பாக்கள், என வெடி வைத்து தகர்த்தோம். சுவர்களில் உள்ள ஒட்டைகளில் வெடி வைத்து பெரிதாக்குவது என அந்த கால கட்டங்கள் மகிழ்ச்சியானவை. யார் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் அதிகம் என்ற கருத்தரங்கமும் நடக்கும். ஆனால், இப்போது அது போல இல்லை இரவில் ஒரு பெட்டி மத்தாப்பு பகலில் ஒரு சரவெடியுடன் முடிகிறது. தொலைக்காட்சி தான் கதியாகிவிட்டது. அன்டை வீட்டுக்கு கூட செல்வதில்லை. புணிதப் பண்டிகையில் மது அருந்தி விபத்துகளை உண்டாக்குகின்றனர். தொலைக்காட்சியில் காண்பிக்கும் படங்கள் நம் பார்த்தவை தான். நிகழ்ச்சிகளை இணையத்திலும் பார்க்கலாம். ஆனால், நம் உறவினர்கள் நண்பர்களை அன்று சந்திப்பது அவர்களுக்கு வீட்டுக்கு செல்லது என உறவுகளை பலப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி அணைத்து விட்டு, நம் சமூக வலைதளங்களுக்கும் விடுமுறை விட்டு, பாரம்பரிய முறைப்படி பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். பாதுகாப்பாக ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். வெடிகளை செங்குத்தாக வைத்து முகத்தை தூர வைத்துக் கொண்டு வெடிக்க வேண்டும். வெடிக்காத வெடியின் அருகில் செல்ல வேண்டாம். புஸ்வானத்தை பற்ற வைக்கும் தூர உக்கார்ந்து கொண்டு பக்கவாட்டில் இருந்து வைக்கலாம். சங்கு சக்கரம் பற்ற வில்லை என்றால் கைகளில் தொட வேண்டாம் சென்ற வருடம் என் கையிலே சங்கு சக்கரம் வெடித்துவிட்டது. வெடிகளை கையில் கொளுத்தி போட வேண்டாம், தீபாவளி திரைப்படங்களும் வேண்டாம் .பாதுகாப்பாக பட்டாசு வெடித்து இன்பமாக கொண்டாடுவோம்! தீபாவளி நல்வாழ்த்துக்களுடன். வி.ராஜமருதவேல்.

Monday, October 14, 2013

பகத் சிங்




பகத் சிங் 1907-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந்தேதி பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.
சிறு வயதிலேயே 'ஜாலியன் வாலாபாக்' படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்.

விட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து தோட்டத்தில் குழி வெட்டி முக்கால்வாசி புதைத்து அதை சுற்றி நீர் ஊற்றினார். அதை பார்த்த, அவரது தந்தை ஏன் பகத் இவ்வாறு செய்கிறாய் ? எனக்கேட்டார். அதற்கு பகத் அப்பா இந்த துப்பாக்கி மரமாகி தன் கிளைகளில் நிறைய துப்பாக்கிகளாய் காய்க்கும் அதை வைத்து வெள்ளையார்களை விரட்டுவேன், என்றார்.

இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். முதுபெரும் காங்கிரஸ் தலைவர் 'லாலா லஜபதிராய்' இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து,சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

அதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங், "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் (Indian parliment) குண்டு வீசுவதென்று தீர்மானித்தார்". 1929 ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 ஆம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட பொழுது, குண்டுகளை வீசினர். இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.

சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் பகத் சிங் வீசிய, "ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்ரி பப்ளிகன் ஆர்மியின்" துண்டுப் பிரசுரம்.
“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
(Sarfrosh gethamanna abh Hamari dilme hai- Punjabi)

பகத் சிங் 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. சில காலம் "நாத்திகனாய் இருந்த பகத் இறப்பதற்கு முன்" தனது சீக்கிய கடமையை நிறைவேற்ற அனுமதி கேட்டார். ஆனால், பிரிட்டிஷ் மறுத்துவிட்டது. அவர் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டணை நிறைவேற்ற அனுமதி கோரினார். அதுவும் மறுக்கப்பட்டது.

தூக்குமேடைக்கு அழைத்து செல்ல படுகிறார் பகத்சிங். தூக்கில் போடுவதற்க்காக பகத் சிங் முகத்தை கருப்பு துணியால் மூட முற்படுகிறார்கள். உடனே ,பகத் சிங் நான் மரணமடையும் போதும் என் இந்தியாவை பார்த்துக்கொண்டே சாக விரும்புகிறேன் என் முகத்தை மூட வேண்டாம் என கேட்டு கொள்கிறார்.
மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது. அவர் சொந்த ஊருக்கு அவனுடைய அஸ்தி கொண்டுவர படுகிறது. துக்கத்தில் இருந்த அந்த கிராம தாய்மார்கள் பகத்சிங்கின் அஸ்தியை எடுத்து தங்களுக்கு இப்படி ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என பகத்சிங்கின் அஸ்தியை தங்கள் வயிற்றில் பூசி கொண்டார்கள்.

இந்நாளில் அவரைப் போற்றுவோம்!
-வி. ராஜமருதவேல்

[copyrights reserved by rajamaruthavel- காப்புரிமை விதிகள் படி கட்டுரையில் மாற்றமில்லாமல் சமுகவலை தளங்களில் இணையங்களில் பகிரலாம்.]

Saturday, September 7, 2013

புராணங்களின் அறிவியல் அறிவுகள்:

         
தமிழர்களின் புராணங்களின் அறிவியல் அறிவுகள்: சங்க இலக்கியமான புறநானூறு,மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வ...ானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. சங்கஇலக்கியமான புறநானூற்றில் ”வலவன் ஏவா வான ஊர்தி ” என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்று கூறுகின்றது. புறநானூறு., விமான ஓட்டி(PILOT)வலவன்”எனஅழைக்கின்றது . சீவகசிந்தாமணியில் சீவகசிந்தாமணியில் வரும் மயில்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது விமான அறிவை வெளிப்படுத்துகிறது.

அதன் பொறியினை “வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக ”திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ தரையில் இறக்க முடியும்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புஷ்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயில்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இராவணன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி உலகை வலம் வந்தான்.

இதன் ஆதாரமாக இலங்கையிலுள்ளா நுவரேலியாவில் இராவணன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம் இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்டஇரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப் படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். விமானிகா சாஸ்திரம் எனும் நூல் பரத்துவாஜரால் எழுதப்பட்டது. விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு. விமானம் பறப்பது (ஏறுவது). இறக்கும் போது விமானத்தின் கட்டப்பாடு. எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள். விஷவாயுக்கள். இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும். பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். விமான ஓட்டி அணிய வேண்டிய உடை. உணவுப்பழக்க வழக்கம். விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம். என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப் பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழுவகையான கண்ணாடிகளும் லென்சுகளும் பொருத்தப்பட வேண்டும் இந்தலென்சுகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.

அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும். என்றும் சூரிய ஒளியில் மின்சத்தியைப்பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் கூறிப்பிட்டுள்ளது. இனி ரிஷிகள் குறிப்பிடும் விமானங்களைப் பற்றி சிறிது பார்ப்போம்.
1. சக்தி யுகம் : வானத்திலிருந்தே எரிபொருளை சேமித்துக் கொண்டு பல நாட்கள் பறந்து கொண்டே இருக்கும் திறன் படைத்த விமானம் இது.
2. பூதவாஹா : முன்னும் பின்னும் சமவேகத்தில் பறக்கும் இயல்புடைய விமானம்.
3. தூமாயனா : எரிக்கப்பட்ட எரிபொருளையே தாமே புதிய எரிபொருளாகக் கொண்டு இயக்கக் கூடிய விமானம்.
4. கிதோகமா : சிகி, சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெரும் எண்ணையில் இயங்கக் கூடிய விமானம்.
5. ஹம் சுவாகா : சேமித்து வைக்கும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அபாரத்திறன் படைத்த விமானம்.
6. தாரமுஹா : வானிலிருந்து பூமியை நோக்கி வரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கக் கூடிய விமானம்.
7. மாணிவஹா : சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் விஜய, பாத்ரா, ஆஷ்ஹா போன்ற உலோகப் பொருட்களாலும் செயற்கை ரசாயன உப்புகளாலும் செல்லக்கூடிய விமானம்.
8. மாராதசாஹா : இது வானில் இருந்தபடியே காற்றை உறிஞ்சி மின்சார சக்தியை எடுத்து இயங்கும் விமானம்.
இது தவிர ‘ஷக்டிங்கர்ப்பம்’, ‘விக்யுதம்’, ‘துருபதம்’, ‘குண்டலிகமும்’ போன்ற விமானங்கள் இருந்ததாகவும் பரத்வாஜர் குறிப்பிடுகிறார். -வி.ராஜமருதவேல்

Wednesday, July 31, 2013

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள் -NATIONAL AWARDS

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

• இந்தியாவின் மிக உயர்ந்த விருது 'பாரத ரத்னா' 

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கெüரவ ராணுவ விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

-V.RAJAMARUTHAVEL