Sunday, March 24, 2013

யாளி


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது. யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோ...யில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்:

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்:

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

(௧) சிம்ம யாளி
(௨) மகர யாளி
(௩) யானை யாளி

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை..., வியன்மை ‍என
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!

1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)
மேலும் பார்க்க

Saturday, March 2, 2013

இராணி வேலு நாச்சியார்

ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783
முடிசூட்டு விழா கி.பி 1780
பிறப்பு 1730
பிறப்பிடம் இராமநாதபுரம்
இறப்பு 25 டிசம்பர், 1796
முன்னிருந்தவர் முத்து வடுகநாதர்
அரச வம்சம் சேது மன்னர்
உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்டு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். வெள்ளையரை எதிர்த்தவர்களில் தன் வாழ்நாள் முழுவதும் அரசாண்டவரும் இவர் மட்டுமே.

சிறு வயதிலேயே பல மொழிகளையும் போர்கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர்.தன் கைகளால் வாளை இரண்டாக உடைத்தவர். சேதுபதி மன்னருக்கு மகளாய் பிறந்து சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரை மணந்தார்.ஆயுதமின்றி காளையர்கோவிலில் வழிபட்ட முத்துவடுகநாதரை நவாபும் ஆங்கிலேயரும் பெரும் படைகொண்டழித்தனர். சிலகாலம் கழித்து தன்நாட்டை மருதுபாண்டியர் ஹைதர்அலி படையுதவியுடன் நாட்டை மீட்டார். கணவரை கொன்ற தளபதி ஜோசப் ஸ்மித், பான் கழுத்தில் கத்தி வைக்க அவர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போது இந்திய போர் தர்மப்படி மன்னித்து உயிர்பிச்சை அளித்தவர். அவரின் 215வது நினைவுநாளில் மகாராணியின் வீரத்தைப் போற்றுவோம்.

।வி .ராஜமருதவேல் ।

உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்டு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். வெள்ளையரை எதிர்த்தவர்களில் தன் வாழ்நாள் முழுவதும் அரசாண்டவரும் இவர் மட்டுமே.

சிறு வயதிலேயே பல மொழிகளையும் போர்கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர்.தன் கைகளால் வாளை இரண்டாக உடைத்தவர். சேதுபதி மன்னருக்கு மகளாய் பிறந்து சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரை மணந்தார்.ஆயுதமின்றி காளையர்கோவிலில் வழிபட்ட முத்துவடுகநாதரை நவாபும் ஆங்கிலேயரும் பெரும் படைகொண்டழித்தனர். சிலகாலம் கழித்து தன்நாட்டை மருதுபாண்டியர் ஹைதர்அலி படையுதவியுடன் நாட்டை மீட்டார். கணவரை கொன்ற தளபதி ஜோசப் ஸ்மித், பான் கழுத்தில் கத்தி வைக்க அவர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட போது இந்திய போர் தர்மப்படி மன்னித்து உயிர்பிச்சை அளித்தவர். அவரின் 215வது நினைவுநாளில் மகாராணியின் வீரத்தைப் போற்றுவோம்.

।வி .ராஜமருதவேல் ।

தமிழகதகவல்


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்
தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
.4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்
பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

பொதிகை மலை

நம் தமிழ் தோன்றிய பொதிகை மலையே. அதில் தெரிவது குற்றால அருவி தான். இலஞ்சி முருகன் கோவில் அருகே நான்( கிஷன்) எடுத்த புகைப்படம்.

கோயில்கள்:

கோயில்கள்:கோயில்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள். இன்று இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள்,நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ, வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய அறிவுச் சொற்பொழிவுகளை கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே.நமது முன்னோர்களுக்கிருந்த வரலாற்று நோக்கு அவர்களைத் தமது ஊர் சார்ந்த செய்திகளைக் கோயில்களின் கருங்கல் சுவர்களில் கல்வெட்டாய்ப் பொறிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே. நமது முன்னோர்களின் கலைத்திறனுக்குச் சான்று வேண்டுமா, செல்லுங்கள் கோயில்களை நோக்கி. கோயில்களில் உள்ள சிற்பங்களின் வடிவில் உள்ள முந்தைய கால வீரர்களும் நாரீமணிகளும், ஆயிரம் ஆண்டுகளாய் அழியாமல் ஒரு சிலகோயில்களில் இன்றும் பேசாமல் பேசும் உயர்சித்திரங்களும் நமது மூதாதையர்கள் கொண்டிருந்த உயர் கலைத்திறனை, உள்ளத்தில்தோன்றியதையும், தாம் பார்த்தஅன்றாட நிகழ்வுகளையும் கல்லிலே செதுக்கி ஓவியத்திலே காட்சிகளாய் விரித்த அவர்களின் கைவித்தையைப் பறைசாற்றும்.
இசை, நாட்டியம் நாடகம், ஓவியக்கலை எனப் பல கலைகளும் தமிழ் நாட்டினருடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்ததை நமக்குச் சங்க இலக்கியங்களும் அதற்குப் பின் வந்த இரட்டைக்காப்பியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தெளிவாக விளக்குகின்றன.

வி.ராஜமருதவேல்.


கோயில்கள்:

கோயில்கள்:
கோயில்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள். இன்று இறை வழிபாட்டிற்கு மட்டுமே என்ற அளவில் இருக்கும் கோயில்கள்,நமது முன்னோர்களுக்கு வாழ்க்கையுடனும் சமுதாயத்துடனும் பின்னிப் பிணைந்த ஒரு ஆதார தலமாக இருந்தது. முக்கியச் செய்திகளை விவாதித்து முடிவெடுக்கவோ, அச்செய்திகளை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பத்திரப்படுத்தவோ, இயல் இசை நாடகங்களை கூடி இரசிக்கவோ, வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றிய அறிவுச் சொற்பொழிவுகளை கேட்டு மகிழவோ, தமது வாழ்வின் மங்கள நிகழ்ச்சிகளைக் கொண்டாடவோ மக்கள் நாடியது கோயில்களையே.நமது முன்னோர்களுக்கிருந்த வரலாற்று நோக்கு அவர்களைத் தமது ஊர் சார்ந்த செய்திகளைக் கோயில்களின் கருங்கல் சுவர்களில் கல்வெட்டாய்ப் பொறிக்க வைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டு காலத் தென்னிந்திய வரலாற்றை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுவது கோயில்களில் உள்ள கல்வெட்டுகளே. நமது முன்னோர்களின் கலைத்திறனுக்குச் சான்று வேண்டுமா, செல்லுங்கள் கோயில்களை நோக்கி. கோயில்களில் உள்ள சிற்பங்களின் வடிவில் உள்ள முந்தைய கால வீரர்களும் நாரீமணிகளும், ஆயிரம் ஆண்டுகளாய் அழியாமல் ஒரு சிலகோயில்களில் இன்றும் பேசாமல் பேசும் உயர்சித்திரங்களும் நமது மூதாதையர்கள் கொண்டிருந்த உயர் கலைத்திறனை, உள்ளத்தில்தோன்றியதையும், தாம் பார்த்தஅன்றாட நிகழ்வுகளையும் கல்லிலே செதுக்கி ஓவியத்திலே காட்சிகளாய் விரித்த அவர்களின் கைவித்தையைப் பறைசாற்றும்.
இசை, நாட்டியம் நாடகம், ஓவியக்கலை எனப் பல கலைகளும் தமிழ் நாட்டினருடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருந்ததை நமக்குச் சங்க இலக்கியங்களும் அதற்குப் பின் வந்த இரட்டைக்காப்பியங்களான, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவையும் தெளிவாக விளக்குகின்றன.

வி.ராஜமருதவேல்.

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

அங்கோர் வாட் கோயில்

அங்கோர் வாட் கோயில்  உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ளது  . உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ்  மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.
பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேசியக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.


 இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.    
          
 


பாரதியார் பாட்டு

பாரதியார் பாட்டு பகுதி 1.செந்தமிழ் நாடு ; சுயநலமில்லா ஒரே புரட்சியாளரான "பாரதியாரின் பாடல்கள்" .பாரதியின் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு:
உய் வீரம் செறிந்த தமிழ்நாடு
நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்
... இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு .

காவிரி தென்பெண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி
என மேவி யாறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே
நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே
அவையாவும் படைத்த தமிழ்நாடு.

நீலத் திரைக்கட லோரத்திலே
நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை
வடமாலவன் குன்றம் இவற்றிடையே
புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு
நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்
மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு.

சிங்களம் புட்பகம் சாவக
மாதியதீவு பலவினுஞ் சென்றேறி
அங்குதங்கள் புலிக்கொடி மீன்கொடியும்
நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு.

விண்ணை யிடிக்கும் தலையிமயம்
எனும்வெற்பை யடிக்கும் திறனுடையார்
சமர்பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்
தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

சீன மிசிரம் யவனரகம்
இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்
கலைஞானம் படைத்தொழில் வாணிபமும்
மிகநன்று வளர்த்த தமிழ்நாடு.

வி.ராஜமருதவேல்.